FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ரூ. 20 கோடி தங்கம், வைரம், வெள்ளி பறிமுதல்!

மகாராஷ்டிரத்தில் தேர்தலையொட்டி கண்காணிப்பு பணிகள் தீவிரம்

Updated On : 2 நவம்பர் 2024, 12:33 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மகாராஷ்டிரத்தில் ரூ. 20 கோடி மதிப்பிலான தங்க, வைர, வெள்ளி நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மகாராஷ்டிரத்தில் நவ. 20 ஆம் தேதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அஹில்யாநகர் மாவட்டத்தில் 3 பேர் ஒன்றாக வந்த வாகனத்தைச் சோதனையிட்டபோது, அவர்களிடம் சுமார் ரூ. 24 கோடி மதிப்பிலான தங்கம், வைரம், வெள்ளி நகைகள் இருப்பது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

அதற்குண்டான ரசீது என்று கூறி, அவர்கள் அளித்த சீட்டில் இருந்த நகைகளின் எண்ணிக்கையானது, அவர்கள் கொண்டு வந்திருந்த நகைகளின் எண்ணிக்கைக்கு மாறாக இருந்தது. இதனைத் தொடர்ந்து, நகைகளைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments