வயநாடு வந்தார் ராகுல் காந்தி!
தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடுக்கு வருகை தந்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடுக்கு வருகை தந்துள்ளார்.
வயநாடு மக்களவைத் தொகுதிக்கு வருகிற நவம்பர் 13-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து காங்கிரஸ் பொதுச் செயலாளரும் வேட்பாளருமான பிரியங்கா காந்தி இன்று வயநாட்டில் அடுத்த கட்ட பிரசாரத்தை முன்னெடுக்கிறார்.
இந்த நிலையில் தனது சகோதரியும் வேட்பாளருமான பிரியங்கா காந்திக்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி இன்று வயநாட்டில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
Advertisement
இதையொட்டி ராகுல் காந்தி தனி ஹெலிகாப்டர் மூலமாக இன்று பிற்பகல் வயநாட்டுக்கு வருகை தந்துள்ளார்.
இதையும் படிக்க | வங்கிக் கடன்! பெற்ற மகனை ரூ. 9,000-க்கு விற்ற தாய்!
வயநாட்டில் பிரியங்கா காந்திக்கு எதிராக பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ், இடதுசாரி முன்னணி சார்பில் சத்யன் மொகேரி போட்டியிடுகின்றனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, கேரளத்தில் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றார். ரேபரேலி எம்.பி. பதவியை தக்கவைத்த ராகுல் காந்தி, வயநாடு எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து வயநாட்டில் தற்போது பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.