தேர்தல் ஆணையம் 
இந்தியா

கேரளம், 2 மாநில இடைத்தேர்தல் தேதி மாற்றம்!

3 மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி மாற்றம்.

DIN

கேரளம், பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தல் தேதி மாற்றப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பல்வேறு மாநிலங்களில் காலியாகவுள்ள 2 மக்களவை மற்றும் 48 சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், நவம்பர் 13-ஆம் தேதி பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படவுள்ள காரணத்தால், அன்றைய தினம் சில தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தேதியை மாற்றக் கோரி அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று, கேரள மாநிலம் பாலக்காடு, பஞ்சாப் மாநிலம் தேரா பாபா நானக், சப்பேவால், பர்னாலா மற்றும் கிட்டெர்பாஹா ஆகிய சட்டப்பேரவைகளுக்கு நவ. 13ஆம் தேதிக்கு பதிலாக நவ. 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீராப்பூர், காசியாபாத், கர்ஹல் உள்பட 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும் நவ. 20ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும், முன்பே அறிவித்திருந்தபடி, நவ. 23 மற்றும் 25ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 20 மீனவா்கள் தமிழகம் வந்தனா்

ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

காலியாகவுள்ள 2,299 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கு 2-ஆம் சுற்று கலந்தாய்வு தொடக்கம்

குலசேகரம் அருகே பெண் தற்கொலை வழக்கு: வருவாய் ஆய்வாளா் கைது

நேபாள பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த இந்திய தூதா்

SCROLL FOR NEXT