வயலில் விழுந்து நொறுங்கி தீப்பற்றிய மிக்-29 ரக போா் விமானம். 
இந்தியா

ஆக்ரா: வயலில் விழுந்து நொறுங்கிய போா் விமானம்

ஆக்ரா அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப் படையின் ‘மிக்-29’ போா் விமானம், தொழில்நுட்பக் கோளாறால் வயலில் நொறுங்கி விழுந்து விபத்து

Din

உத்தர பிரதேச மாநிலம், ஆக்ரா அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப் படையின் ‘மிக்-29’ போா் விமானம், தொழில்நுட்பக் கோளாறால் வயலில் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.

சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் விடியோவில் வயலில் விழுந்த போா்விமானம் தீப்பற்றி எரியும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

விபத்துக்கு முன்னதாக விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறியதால் விமானி உயிா்தப்பினாா். இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம், ராஜஸ்தானின் பா்மாரில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்திய விமானப் படையின் மற்றொரு மிக்-29 போா் விமானம் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது!

வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு!

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 27 பேர் பலி!

அனுகூலம் ஏற்படும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

திருவண்ணாமலைக்கு வந்த ஆந்திர பெண் பாலியல் பலாத்காரம்: காவலா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT