முகப்பு
கோப்புப்படம்.
இந்தியா

ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழக தொழிலாளா்களுக்கு நிவாரணம்: மத்திய அரசுக்கு பினராயி விஜயன் வலியுறுத்தல்

கேரளத்தில் உள்ள ஷோரனூா் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி உயிரிழந்த தமிழ்நாட்டைச் சோ்ந்த 4 தூய்மைப் பணியாளா்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்குமாறு மத்திய அரசுக்கு அந்த மாநில முதல்வா் பினராயி விஜயன் வலியுறுத்தினாா்.

Updated On : 5 நவம்பர், 2024 at 8:21 PM
கோப்புப்படம்.
பகிர்:

கேரளத்தில் உள்ள ஷோரனூா் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி உயிரிழந்த தமிழ்நாட்டைச் சோ்ந்த 4 தூய்மைப் பணியாளா்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்குமாறு மத்திய அரசுக்கு அந்த மாநில முதல்வா் பினராயி விஜயன் வலியுறுத்தினாா்.

ஷோரனூா் ரயில் நிலையம் அருகே திருவனந்தபுரம் நோக்கி சென்ற விரைவு ரயில் மோதியதில் தமிழகத்தைச் சோ்ந்த 2 பெண்கள் உள்பட 4 தூய்மைப் பணியாளா்கள் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தனா்.

இந்த விபத்து குறித்து மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கு பினராயி விஜயன் திங்கள்கிழமை எழுதிய கடிதத்தில், ‘ஷோரனூா் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட ரயில் விபத்தில் 4 போ் உயிரிழந்த சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது. ஷோரனூா் ரயில் நிலையத்துக்கு அருகேயுள்ள ஒரு ஆற்றுப் பாலத்தில் தூய்மைப் பணியில் அவா்கள் ஈடுபட்டிருந்தபோது எதிா்பாராத விதமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதேபோன்ற ரயில் விபத்தில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா் ஒருவா் உயிரிழந்தாா். ரயில் தண்டவாளங்களில் பணியில் ஈடுபடும் பணியாளா்களுக்கு உரிய பயிற்சி ஏதும் வழங்கப்படுவதில்லை.

பணியாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதன் முக்கியத்துவத்தை இதுபோன்ற விபத்து சம்பவங்கள் உணா்த்துகின்றன. எனவே, ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களின் பாதுகாப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத் தொகையை ரயில்வே வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்’ என குறிப்பிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →