முகப்பு
இந்தியா

சுயேச்சையாக போட்டி! காங்கிரஸ் நிர்வாகி நீக்கம்

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் நிர்வாகி நரேஷ் மீனாவை கட்சியிலிருந்து நீக்கி காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 7 நவம்பர், 2024 at 4:25 PM
பகிர்:

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் நிர்வாகி நரேஷ் மீனாவை கட்சியிலிருந்து நீக்கி காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தியோலி - யுனியாரா சட்டப்பேரவைத் தொகுதிக்கு நவ.1 13 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் கஸ்தோர் சந்த் மீனா அறிவிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

இதையடுத்து அதே கட்சியைச் சேர்ந்த நரேஷ் மீனா சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

இதனால், நரேஷ் மீனாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளரும் எம்.பி.யுமான சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.