முகப்பு
தமிழ்நாடு

முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!

தவெகவில் இணைந்த காங்கிரஸ் நிர்வாகி டி. செல்வம் குறித்து...

Updated On : 26 மார்ச் 2026, 6:15 pm IST
தவெகவில் இணைந்த காங்கிரஸ் நிர்வாகி டி. செல்வம். - படம்: தவெக ஐடி விங்
பகிர்:

முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலாளர் டி. செல்வம், இன்று(மார்ச் 26) விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த டி. செல்வத்தை இடைநீக்கம் செய்து மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை புதன்கிழமை உத்தரவிட்டார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட டி. செல்வம் இன்று, பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அந்தக் கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.

Advertisement

Advertisement

அப்போது, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக்கட்சியினரும் தவெகவில் இணைந்தனர்.

அண்மை நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா , “காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தவெகவில் இணைய வாசலில் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இரண்டு நாள்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் தவெகவில் இணையவுள்ளனர்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலாளர் டி. செல்வம், இன்று தவெகவில் இணைந்துள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், திமுகவுடன் கூட்டணியை இறுதி செய்தது குறிப்பிடத் தக்கது.

summary

Former Congress General Secretary T. Selvam joined Tvk today (March 26) in the presence of Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments