முகப்பு
என்ஜினுடன் பெட்டிகளை இணைக்கும் போது உடல் நசுங்கி ரயில்வே ஊழியர் பலி
இந்தியா

பிகார்: என்ஜினுடன் பெட்டிகளை இணைக்கும் போது உடல் நசுங்கி ரயில்வே ஊழியர் பலி

பரவுனி ரயில் நிலையத்தில் என்ஜினுடன் ரயில் பெட்டிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பாலியானார்.

Updated On : 9 நவம்பர், 2024 at 1:59 PM
என்ஜினுடன் பெட்டிகளை இணைக்கும் போது உடல் நசுங்கி ரயில்வே ஊழியர் பலி
பகிர்:

பரவுனி ரயில் நிலையத்தில் என்ஜினுடன் ரயில் பெட்டிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பாலியானார்.

பிகார் மாநிலம், பரவுனி ரயில் நிலையத்தில் லக்னௌ-பரௌனி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளை என்ஜினுடன் இணைக்கும் பணியில் ரயில்வே ஊழியர் அமர் குமார் ராவ் சனிக்கிழமை ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

மத்திய கிழக்கில் போர்நிறுத்தம் ஏற்பட டிரம்ப் செயலாற்ற வேண்டும்: இராக் பிரதமர்

அப்போது இரண்டுக்கும் இடையே எதிர்பாராத விதமாக சிக்கிய ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பலியானார். லோகோ பைலட் எஞ்சினை முன்னோக்கி இயக்குவதற்கு பதிலாக பின்னோக்கி இயக்கியதால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

சுற்றி இருந்தவர்கள் அலறல் சத்தம் கேட்டதும் லோகோ பைலட் இறங்கி தப்பியோடிவிட்டதாகவும், என்ஜினை மாற்றவோ அல்லது விபத்தைத் தடுக்க அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பான விடியோ காட்சி இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →