கொழும்பு வந்த இந்திய கடற்படையின் நீா்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் வேலாவுக்கு இலங்கை கடற்படையினரால் வரவேற்பு அளிக்கப்பட்டது.  
இந்தியா

கொழும்பில் இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் வேலா!

இந்திய கடற்படையின் நீா்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் வேலா மூன்று நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை கொழும்பு துறைமுகம் வந்தது.

DIN

கொழும்பு: இந்திய கடற்படையின் நீா்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் வேலா மூன்று நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை கொழும்பு துறைமுகம் வந்தது.

இந்திய நீா்மூழ்கிக் கப்பலுக்கு, கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் வரவேற்பு அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை கடற்படை வீரா்கள் நீா்மூழ்கிக் கப்பலின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்காக விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கும், இந்திய நீர்மூழ்கிக் கப்பலின் குழுவினருக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையே கூடைப்பந்து போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு கல்வாரி வகை டீசல்-மின்சார நீா்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் வேலா கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பா் 25 ஆம் தேதி இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இதன் கமாண்டராக கபில் சா்மா பொறுப்பு வகிக்கிறாா்.

நீா்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் வேலா கொழும்பு வருகை இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என நம்பப்படுகிறது. மூன்று நாள் பயணத்தை முடித்துக்கொண்டு ஐஎன்எஸ் வேலா புதன்கிழமை(நவ.13) கொழும்பிலிருந்து புறப்படுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நூறு நாள் வேலைத் திட்ட மாற்றம் தோ்தலில் தலையாய பிரச்னையாக இருக்கும்

கந்தா்வன் நினைவுச் சிறுகதைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

நடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு 1,139 மண் வள அட்டைகள்

மன்மோகன்சிங் நினைவு நாள் அனுசரிப்பு

தொட்டியத்தில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT