பத்தனம்திட்டாவில் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்து சாலையில் பிறந்தநாள் கொண்டாடியதாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சந்திப்பின் சாலையில் ஒரு குழுவினர் தங்கள் நண்பரின் பிறந்த நாளை கேக் வெட்டி சனிக்கிழமை இரவு 9.15 மணியளவில் கொண்டாடினர். இதற்காக அக்குழுவினர் சாலையை மறித்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பத்தனம்திட்டா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்த முக்கிய சந்தேக நபரை ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் வெட்டிபுரத்தைச் சேர்ந்த ஷியாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மாவட்ட காவல்துறைத் தலைவரின் உத்தரவின் பேரில், மேலும் 20 சந்தேக நபர்களைக் கண்டறிய விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று காவல்துறை ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.