சச்சின் சாவந்த்  dinmani online
இந்தியா

தொலைக்காட்சி தொடர்களை பிரசாரத்திற்கு பயன்படுத்துகிறார் ஏக்நாத் ஷிண்டே: காங்கிரஸ் குற்றச்சாட்டு

மராத்தி தொலைக்காட்சி தொடர்களை பிரசாரத்திற்கு ஷிண்டே தலைமையிலான சிவசேனை பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

DIN

மராத்தி தொலைக்காட்சி தொடர்களை பிரசாரத்திற்கு ஷிண்டே தலைமையிலான சிவசேனை பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து மாநில காங்கிரஸ் பொதுச் செயலர் சச்சின் சாவந்த் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையின் போஸ்டர்கள் சில தொலைக்காட்சித் தொடர்களின் வெளிப்புறக் காட்சிகளில் காண்பிக்கப்பட்டன.

பராமரிப்பு பணிகள் - வரும் 17ம் தேதி புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

இது மாதிரி நடத்தை விதிகளை கடுமையாக மீறுவதாகும். நவம்பர் 13 ஆம் தேதி ஸ்டார் பிரவா சேனலில் ஒளிபரப்பான தொடரிலும், அதைத்தொடர்ந்து அண்மையில் பிரிமாச்சி கோஷ்ட் தொடரிலும் ஷிண்டே கட்சியின் போஸ்டர்கள் காணப்பட்டன. இது ஒரு தீவிரமான விஷயம். தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

288 பேரவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரத்தில் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி ஒரேகட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் இறுதி கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே வியத்நாம்... டோனல் பிஷ்ட்!

கொடூரமான சண்டைக் காட்சிகள்... வைரலாகும் துரந்தர் பட டிரைலர்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் குறைந்து ரூ.88.61ஆக நிறைவு!

நெல் சேமிப்புக் கிடங்குகளுக்கு செலவிட்ட ரூ. 309 கோடி எங்கே? - அண்ணாமலை கேள்வி

நீல நிற மயில்... அஞ்சு குரியன்

SCROLL FOR NEXT