பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் (கோப்புப்படம்)
இந்தியா

மகாராஷ்டிர தேர்தல்: 6,382 விதிமீறல் புகார்கள், ரூ.536 கோடி பறிமுதல்!

மகாராஷ்டிர தேர்தலில் விதிகளை மீறியதாக 6,382 புகார்கள் தேர்தல் ஆணையத்திடம் பதிவாகியுள்ளன.

DIN

மகாராஷ்டிரத் தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 6,382 புகார்கள் தேர்தல் ஆணையத்திடம் பதிவாகியுள்ளன. மேலும், ரூ.536 கோடி, பரிசுப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மகாராஷ்டித்துக்கு கடந்த அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் நேற்றுவரை(நவ.14) தேர்தல் ஆணையத்தின் சிவிஜில் செயலியில் இந்தப் புகார்கள் பதிவு செய்யப்பட்டதாக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிவிஜில் செயலி இந்திய தேர்தல் ஆணையத்தால், பொதுமக்கள் புகாரளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாத காலத்தில் 6,381 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் புகார்கள் சம்பந்தப்பட்ட துறையின் மூலம் தீர்வுகாணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியில் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ரூ.536.45 கோடி, மதுபானங்கள், போதைப்பொருள்கள், தங்கம், வெள்ளி உள்பட விலையுயர்ந்த பொருள்களும் அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெறுவதைத் தடுக்க இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

SCROLL FOR NEXT