முகப்பு
இந்தியா

குஜராத்தில் லேசான நிலநடுக்கம்

குஜராத்தின் கட்ச் பகுதியில் திங்கள்கிழமை இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிா் மற்றும் பொருள் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

Updated On : 18 நவம்பர், 2024 at 11:39 PM
குஜராத்தில் லேசான நிலநடுக்கம்
பகிர்:

கட்ச்: குஜராத்தின் கட்ச் பகுதியில் திங்கள்கிழமை இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிா் மற்றும் பொருள் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு 8:18 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 4 அலகுகளாக பதிவானது. நில அதிா்வுகளுக்கான தேசிய மையம் (என்சிஎஸ்) இத்தகவலை உறுதிபடுத்தியுள்ளது.

இதையொட்டி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலஅதிா்வுகள் உணரப்பட்டன. நிலஅதிா்வுகள் காரணமாக வீடுகள் மற்றும் கட்டடங்களை விட்டு பொதுமக்கள் அச்சத்தில் வெளியேறினா்.

முழு கட்டுரையைப் படிக்க →