கிரண் ரிஜிஜு கோப்புப்படம்
இந்தியா

குளிர்கால கூட்டத்திலேயே ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல்: கிரண் ரிஜிஜு

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா குறித்து கிரண் ரிஜிஜு பேசியது...

DIN

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலேயே ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு முன்மொழிந்த ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

இந்தக் குழு சமா்பித்த அறிக்கையில், ‘மக்களவைக்கும், சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தலை நடத்த சாத்தியமுள்ளது. அதற்கேற்ப சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஆலோசனைகள் தெரிவித்துள்ளது.

இந்த மசோதாவானது விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருகின்ற குளிர்காலக் கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற விவாகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தில்லி கல்லூரி நிகழ்வில் கலந்து கொண்ட கிரண் ரிஜிஜு பேசியதாவது:

”நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டுமென்றால், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தேர்தல் நடத்தப்பட வேண்டும், மற்ற 5 ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தலைமையிலான குழுவினரின் அறிக்கையை நான் நம்புகிறேன். அந்த அறிக்கை நாடாளுமன்றத்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

நாம் ஒரே நாடு என்பதால், ஒரே தேர்தலை நடத்தி நாம் அனைவரும் ஒன்றாக வாக்களிக்க வேண்டும்.

நாடாளுமன்ற அவைகள் நவம்பர் 25ஆம் தேதி கூடுகிறது. பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவும் தாக்கல் செய்யப்படும் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ள நிலையில், இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்யும் எனத் தெரிகின்றது.

ஏற்கெனவே, கேரளம், தமிழகம் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் இந்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT