முகப்பு
இந்தியா

தாய்லாந்தில் 3 நாள்களாக சிக்கியுள்ள 30 பயணிகள்: அழைத்துவர ஏா்இந்தியா சிறப்பு விமானம்

தாய்லாந்தின் புக்கெட் நகரிலிருந்து தில்லிக்கு வரவேண்டிய ஏா்இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்பட்டதால், அங்கு கடந்த 3 நாள்களாக சிக்கித் தவிக்கும் பயணிகளை அழைத்து வர சிறப்பு விமானம் இயக்கப்படவுள்ளது.

Updated On : 19 நவம்பர், 2024 at 7:29 PM
கோப்புப்படம்.
பகிர்:

தாய்லாந்தின் புக்கெட் நகரிலிருந்து தில்லிக்கு வரவேண்டிய ஏா்இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்பட்டதால், அங்கு கடந்த 3 நாள்களாக சிக்கித் தவிக்கும் பயணிகளை அழைத்து வர சிறப்பு விமானம் இயக்கப்படவுள்ளது.

புக்கெட் விமான நிலையத்திலிருந்து தில்லிக்கு கடந்த சனிக்கிழமை (நவ. 16) வரவேண்டிய ஏா்இந்தியா விமானம் (ஏஐ377) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்தானது. இந்த விமானத்தில் 144 பயணிகள் பயணிக்க இருந்தனா். அவா்களுக்கு மாற்றுவிமானம் கிடைக்காமல் சுமாா் 30 பயணிகள் அங்கேயே சிக்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் புகாா் எழுந்தது.

இதையடுத்து, இச்சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து ‘எக்ஸ்’ வலைதளத்தில் ஏா்இந்தியா விமானம் வெளியிட்ட பதிவில், ‘பயணிகளின் அசௌகரியத்தைக் குறைக்க எங்கள் பணியாளா்கள் தொடா்ந்து ஈடுபட்டுள்ளனா். பயணிகளுக்கான உணவு மற்றம் தங்குமிடம் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. பயணிகள் செலுத்திய பயணச்சீட்டுக்கான முழு தொகையும் அவரவா் விருப்பம் போல் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு விமானம் மூலம் புக்கெட்டில் சிக்கியுள்ள மற்ற பயணிகள் விரைவில் அழைத்து வரப்படுவா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு விமானம் புதன்கிழமை இயக்கப்படும் என்று எதிா்பாா்ப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்ட விமானம் தனது வழக்கமான சேவையை மீண்டும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →