கோப்புப்படம் 
இந்தியா

ஜார்க்கண்ட்டில் பாஜக ஆட்சியா? கருத்துக் கணிப்பு முடிவுகள்!

ஜார்க்கண்ட்டில் வாக்குப்பதிவுக்குப் பிறகான கருத்துக் கணிப்புகளின் முடிவில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிகிறது.

DIN

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஜார்க்கண்ட்டில் உள்ள 81 பேரவைத் தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவாக 38 தொகுதிகளுக்கு இன்று (நவ. 20) வாக்குப்பதிவு நடைபெற்றது. 38 தொகுதிகளிலும் மொத்தம் 528 வேட்பாளர்கள் இரண்டாம் கட்டத் தேர்தல் களத்தில் உள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

இத்தோ்தலில் 12 மாவட்டங்களில் 14,218 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 81 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்டில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 41 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

பீப்பில்ஸ் பல்ஸ் (Peoples Pulse) நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி,

பாஜக கூட்டணி 44 - 53

காங்கிரஸ் கூட்டணி 25 - 37

மற்றவை 5 - 9

மாட்ரிஸ் (Matrize) நிறுவன கருத்துக் கணிப்பு முடிவுகள்

பாஜக கூட்டணி 42 - 47

காங்கிரஸ் கூட்டணி 25 - 30

மற்றவை 1 - 4

சி.என்.என். (CNN) கருத்துக் கணிப்பு

பாஜக கூட்டணி - 45

காங்கிரஸ் கூட்டணி - 33

மற்றவை - 3

ஆக்ஸிஸ் மை இந்தியா (Axis My India) கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் கூட்டணி 53

டைம்ஸ் நௌ ஜே.வி.சி. ( The Times Now-JVC) கருத்துக் கணிப்பு

பாஜக கூட்டணி 40 - 44

காங்கிரஸ் கூட்டணி 30 - 40

பி மார்க் (P-marq) கருத்துக் கணிப்பு

பாஜக கூட்டணி 31 - 40

காங்கிரஸ் கூட்டணி 37 - 47

தற்போது கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பாஜக தலைமையிலான கூட்டணியே ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரத்திலும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆயிரம் ஃபாலோயர்ஸ் இல்லாதவர்களுக்கு நேரலை கிடையாது: இன்ஸ்டாகிராம் புதிய விதி!

கருவிழிகள் பேசுதே... ஜன்னத் ஜுபைர்!

இயக்குநர்களின் பாராட்டில் பரிதாபங்கள் விடியோ! குவியும் வாழ்த்துகள்!

குளுகுளு வெண்பனி போல... சாக்‌ஷி அகர்வால்!

இந்திய அணியின் த்ரில் வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம்!

SCROLL FOR NEXT