இந்தியா

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் - அதானி குற்றச்சாட்டுக்கு அமைதி காக்கும் தெலுங்கு தேசம்! காரணம் என்ன?

அதானி விவகாரம் தொடர்பாக தெலுங்கு தேசக் கட்சி கருத்து தெரிவிக்காமல் இருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.

DIN

அதானி விவகாரத்துடன் தொடர்புடைய எதிர்க்கட்சி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டுக்கு ஆளுங்கட்சி தெலுங்குதேசம் கருத்து தெரிவிக்காமல் இருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.

சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக ரூ. 2,100 கோடி லஞ்சமாக இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி கொடுத்ததாகவும், அதனை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாகவும் நியூ யார்க் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஆந்திரத்தில் லஞ்சம் பெறப்பட்டிருப்பதாகவும் அமெரிக்க நீதிமன்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், ``அதானி குழுமத்துடன் நேரடி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை’’ என்று முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மறுத்துள்ளார்.

அமெரிக்காவில் அதானி மீதான குற்றச்சாட்டு அறிக்கை தெரிவித்ததாவது, ``சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SECI) மற்றும் ஆந்திரப் பிரதேச டிஸ்காம் நிறுவனங்களுக்கு இடையே மின் விற்பனை ஒப்பந்தம், 1 டிசம்பர் 2021 ஆம் ஆண்டில் கையெழுத்தானது. ஆந்திரத்துடனான இந்த ஒப்பந்தம் 25 ஆண்டுகளுக்கானது. ஆனால், ஆந்திரம், ஒடிஸாவில் சூரிய சக்தி ஒப்பந்தத்தை வாங்குவதற்காக, இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதாக அதானி குழுமம் உறுதியளித்தது.

இதன்மூலம், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கு ரூ. 2,029 கோடி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. இதனிலிருந்து 2021, 2022 ஆம் ஆண்டுகளில், அப்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்து, எஸ்.இ.சி.ஐ.-உடன் மின் விற்பனை ஒப்பந்தங்களில் கையெழுத்திட கௌதம் அதானி லஞ்சம் கொடுத்தார் என்பது தெரிய வருகிறது.

இருந்த போதிலும், எதிர்க்கட்சியான ஒ.எஸ்.ஆர்.சி.பி.யின் கடந்தகால ஆட்சி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஆளுங்கட்சியான தெலுங்குதேசக் கட்சி எந்தவித விமர்சனங்களோ அறிக்கைகளோ வெளியிடாமல் இருப்பது புதிதாய் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக அரசுக்கும் அதானிக்கும் இடையிலான உறவினால் மட்டுமே தெலுங்குதேசக் கட்சி கருத்து தெரிவிக்காமல் அமைதி காப்பதாகவும் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

SCROLL FOR NEXT