கோப்புப் படம் 
இந்தியா

ஜார்க்கண்ட்: இந்தியா கூட்டணி தொடர்ந்து முன்னிலை!

தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் வகித்த நிலையில், திடீர் திருப்பமாக இந்தியா கூட்டணி முன்னிலை பெற்றது

DIN

ஜார்க்கண்டில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்தில் பின்னடைவில் இருந்த காங்கிரஸ் கூட்டணி திடீர் திருப்பமாக முன்னிலை பெற்றுள்ளது.

ஜார்க்கண்டில் சனிக்கிழமை வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட நிலையில், காலை 11 மணி வரையிலான எண்ணிக்கையில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 50 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 29 தொகுதிகளுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி பின்னடைவில் உள்ளது.

மாநிலத்தில் ஆளும் இந்தியா கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 43, காங்கிரஸ் 30, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 6, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) 4 இடங்களில் போட்டியிட்டன. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 68, அனைத்து ஜார்க்கண்ட் மாணவா் சங்கம் 10, ஐக்கிய ஜனதா தளம் 2, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) ஓரிடத்தில் களம் கண்டன. இந்தத் தேர்தலில் மொத்தம் 1,211 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த நவம்பா் 13, 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 2.60 கோடி வாக்காளா்களைக் கொண்ட இம்மாநிலத்தில் இரு கட்டங்களையும் சோ்த்து 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின.

மகாராஷ்டிரத்திலும் நடத்தப்பட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அங்கும் பாஜக கூட்டணியே முன்னிலை பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடா் மழை: வீடு இடிந்து சேதம்

கலசப்பாக்கம், போளூரில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: ஒருவா் கைது

ராமாலை விஜயநகரத்தம்மன் கோயில் ஆடித் திருவிழா

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT