பிரியங்கா 
இந்தியா

வயநாடு மக்களவைத் தொகுதியில் பிரியங்கா வெற்றி

வயநாடு மக்களவைத் தொகுதியில் பிரியங்கா வெற்றி பெற்றார்.

DIN

வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா, தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இமாலய வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்.

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி 6.22 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பிரியங்கா காந்தி 6,22,338 வாக்குகள் பெற்றுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சத்யன் மொகேரி 2,11,407 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். பாஜக வேட்பாளர் 1,09,939 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இதையும் படிக்க.. மகாராஷ்டிரத்தில் மகாயுதி வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது பெண்களா?

இதன் மூலம் 4.10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா தனது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்.

வெற்றி நிலவரம்

காங்கிரஸ் - பிரியங்கா - 6,22,338

இந்திய கம்யூ. - சத்யன் மொகேரி - 2,11,407

பாஜக - நவ்யா ஹிரிதாஸ் - 1,09,939

வெற்றி வித்தியாசம் - 4,10,931

வாக்கு வித்தியாசத்தில் ராகுலை தோற்கடித்த பிரியங்கா

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 4.10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

பிரியங்கா காந்தி சில ஆண்டு காலமாக அரசியலில் ஈடுபட்டு வந்தாலும், முதல் முறையாக வயநாடு மக்களவைத் தொகுதியில்தான் களம்கண்டுள்ளார்.

முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா, வரலாற்றுச் சாதனையாக மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தனது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்.

2024 மக்களவைத் தேர்தலில், வயநாடு தொகுதியில் போட்டியிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 6.47 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தார். அது மட்டுமல்லாமல் 3.64 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தனது வெற்றியை வயநாடு தொகுதியில் பதிவு செய்திருந்தார். ராகுலின் வெற்றி வித்தியாசத்தை தோற்கடித்த பிரியங்கா, ராகுல் பெற்ற வாக்குகளை விட குறைவாகவே பெற்றிருக்கிறார்.

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் மொத்தமுள்ள 9.52 லட்சம் வாக்குகளில், பிரியங்கா காந்தி 6.22 லட்சம் வாக்குகளைப் பெற்று மகத்தான வெற்றியை பதிவு செய்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் இபிஎஸ் உடன் இணையும் எண்ணம் இல்லை: தினகரன் திட்டவட்டம்!

தொலைக்காட்சியிலும் வெளியாகும் மாமன்!

ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

மேட்டூர் அணை நிலவரம்!

SCROLL FOR NEXT