பிரியங்கா காந்தி. 
இந்தியா

கார்கேவிடம் வாழ்த்து பெற்றார் பிரியங்கா காந்தி

வயநாட்டில் வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகாா்ஜுன கார்கேவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

DIN

வயநாட்டில் வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகாா்ஜுன கார்கேவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது அவருக்கு கார்கே இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து பூங்கொத்து வழங்கியும், பொன்னாடை போர்த்தியும் கார்கே வாழ்த்து தெரிவித்தார். கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி அசுர வெற்றி! ஜார்க்கண்ட்டை தக்கவைத்தது இந்தியா கூட்டணி!!

அதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி 4 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். தேர்தலில் அவர் மொத்தம் 6,22,338 வாக்குகள் பெற்றுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சத்யன் மொகேரி 2,11,407 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். பாஜக வேட்பாளர் 1,09,939 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இதன் மூலம் 4.10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா தனது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மிக்க நன்றி, உங்கள் நம்பிக்கையில் நான் மூழ்கிவிட்டேன் என்று வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கும் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரக்கோணம் ஸ்ரீசாணாத்தியம்மன் கோயில் நவராத்திரி நிறைவு

தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்: கட்சியினா் மரியாதை

ஆற்காடு பேருந்து நிலையத்தில் ஏற்கனவே இருந்தவா்களுக்கு கடைகள்: நகா்மன்றத் தலைவா் உறுதி

மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT