வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெறும் பிரியங்கா, ராகுல் பெற்ற சாதனை வெற்றியை முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஏற்கனவே, வெற்றி வித்தியாசத்தில் ராகுலை வீழ்த்திவிட்ட பிரியங்கா, அவர் பெற்ற வாக்குகளை விட அதிகம் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 3.64 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
இதையும் படிக்க.. மகாராஷ்டிரத்தில் மகாயுதி வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது பெண்களா?
அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி என்பது மட்டுமே இன்னமும் எதிர்பார்க்கப்படும் விஷயமாக உள்ளது.
பிரியங்கா காந்தி சில ஆண்டு காலமாக அரசியலில் ஈடுபட்டு வந்தாலும், முதல் முறையாக வயநாடு மக்களவைத் தொகுதியில்தான் தீவிர அரசியல் எனப்படும் தேர்தலில் களம்கண்டுள்ளார்.
முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா, வரலாற்றுச் சாதனையாக மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தனது வெற்றியைப் பதிவு செய்யவிருக்கிறார்.
2024 மக்களவைத் தேர்தலில், வயநாடு தொகுதியில் போட்டியிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 6.47 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தார். அது மட்டுமல்லாமல் 3.64 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தனது வெற்றியை வயநாடு தொகுதியில் பதிவு செய்திருந்தார். ராகுல் காந்தி பெற்றிருந்தது 59 சதவீத வாக்குகள்.
தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் வயநாடு தொகுதியில் வென்றிருக்கும் பிரியங்கா காந்தி, மற்ற வேட்பாளர்களை தோற்கடித்து வெற்றியை உறுதிசெய்திருந்தாலும், இதற்கு முன்பு இதே தொகுதியில் மகத்தான வெற்றியைப் பதிவு செய்திருக்கும் ராகுலின் சாதனையை முறியடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரியங்கா காந்தி 6.17 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பெற்றிருக்கும் வாக்குகளில் இன்னமும் ராகுலை முந்தவில்லை என்றாலும்கூட, வாக்கு வித்தியாசத்தில், ஏற்கனவே ராகுலின் வெற்றி வித்தியாசத்தை முறியடித்துவிட்டார். தற்போது இந்திய கம்யூ. வேட்பாளர் சத்யன் மொகேரியை விட, பிரியங்கா 4 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவைத் தொகுதியில் மொத்தமுள்ள 9.52 லட்சம் வாக்குகளில், பிரியங்கா காந்தி ஏற்கனவே 6 லட்சம் வாக்குகளைப் பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.