மத்திய அமைச்சரவை முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ். PTI
இந்தியா

மராத்தி, பாலி உள்பட 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து!

5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது பற்றி...

DIN

மராத்தி, பாலி உள்பட 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஏற்கெனவே, தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், கன்னடம், ஒடியா, தெலுங்கு உள்ளிட்ட 6 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

செம்மொழி அந்தஸ்து!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வியாழக்கிழமை மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ், மத்திய அமைச்சரவையின் முடிவுகள் குறித்து விளக்கம் அளித்தார்.

அப்போது, மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமிஸ், பெங்காலி ஆகிய 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

பெங்காலி, மராத்தி உள்ளிட்ட மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து கோரி நீண்ட ஆண்டுகளாக மாநில அரசுகள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், மத்திய அமைச்சரவையின் முடிவை மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.

முதலில் தமிழ்..

முதன்முதலில் கடந்த 2004ஆம் ஆண்டு தமிழ் மொழிக்குதான் செம்மொழி அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியது. இறுதியாக ஒடியா மொழிக்கு 2014ஆம் ஆண்டு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

விஸ்வகா்மா ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

யெஸ் வங்கியின் 13.1% பங்குகள்: எஸ்பிஐ விற்பனை

நடுவானில் இயந்திரக் கோளாறு: சென்னை-பெங்களூரு விமானம் அவசரமாக தரையிறக்கம்

SCROLL FOR NEXT