கோப்புப்படம். 
இந்தியா

தொழில்நுட்ப கோளாறு: சென்னையிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்ட விமானம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதுரை புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சென்னையிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டது.

DIN

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதுரை புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சென்னையிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டது.

124 பேருடன் சென்னையில் இருந்து மதுரைக்கு ஏர் இந்தியா விமானம் சனிக்கிழமை புறப்பட்டது. ஆனால் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.

இதையடுத்து அந்த விமானம் , மீண்டும் சென்னைக்கே திருப்பிவிடப்பட்டு தரையிறங்கியது.

14 ஆண்டுகள்.. பிறழ் சாட்சியான முக்கிய சாட்சி: கொலை வழக்கில் தொழிலதிபர்களுக்கு தண்டனை

உடனே பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கிவிடப்பட்டனர். தொடர்ந்து, பயணிகள் அனைவருக்கும் தங்களது பயணத்துக்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் பயணத்தை ரத்து செய்யும் பயணிகளுக்கு முழுத் தொகையும் திருப்பி வழங்கப்படும் என்றும அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிது பரபரப்பு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூரியவன்ஷி அதிவேக டெஸ்ட் சதம்! 78 பந்துகளில் சதமடித்து ஆஸி.யை அலறவிட்ட சிறுவன்!

40 வயதில் மீண்டும் கருவுற்ற பாலிவுட் நடிகை!

விஜய் பிரசாரம் 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு: தவெக

ரூ. 12,490 கோடி! உலகத்தின் பணக்கார நடிகரானார் ஷாருக்கான்!

அன்பின் வழியில்... அக்‌ஷதா!

SCROLL FOR NEXT