ராமர் வேடத்தில் சுஷில் கௌசிக். 
இந்தியா

தில்லி: ராம்லீலா நிகழ்ச்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் மரணம்

தலைநகர் தில்லியில் ராம்லீலா நிகழ்ச்சியில் ராமர் வேடமிட்டவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

தலைநகர் தில்லியில் ராம்லீலா நிகழ்ச்சியில் ராமர் வேடமிட்டவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் தில்லியின் விஸ்வகர்மா நகரில் ராம்லீலா நிகழ்ச்சியில் சுஷில் கௌசிக்(45) ராமர் வேடமிட்டு நடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

கேரளம்: கோவிலில் நகை திருடிய பூசாரி கைது

மேடையில் நடித்துக்கொண்டிக்கும்போதே இதை உணர்ந்த அவர் நெஞ்சில் கை வைத்தபடியே மேடையை விட்டு இறங்கினார்.

உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மரணமடைந்த சுஷில் கௌசிக் சொத்து இடைத்தரகராக பணிபுரிந்து வந்தார் என்று மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

ஜனவரியில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ஹரியாணா மாநிலம் பிவானி மாவட்டத்தில், ராம்லீலா நிகழ்ச்சியின்போது ஹனுமானாக நடித்தவர், ராமரை சித்தரிக்கும் நபரின் காலில் விழுந்து மேடையிலேயே இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளர்ந்த நிலா... மடோனா செபாஸ்டியன்!

தூய்மைப் பணியாளர் உயிரிழந்தால் ரூ.35 லட்சம் நிவாரணம்: உ.பி. அரசு

ரஷிய அதிபர் புதினுடன் பேசிய மோடி!

பகலை இரவாக்கிய கருமேகங்கள் - புகைப்படங்கள்

நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு| செய்திகள்: சிலவரிகளில் |7.10.25

SCROLL FOR NEXT