முகப்பு
இந்தியா

கொல்கத்தா மருத்துவா்கள் 2-ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்!

கொல்கத்தா மருத்துவா்கள் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம்!

Updated On : 6 அக்டோபர், 2024 at 9:59 AM
- PTI
பகிர்:
Updated On : 6 அக்டோபர், 2024 at 9:16 AM

பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தங்களின் கோரிக்கைகளை மேற்கு வங்க அரசு நிறைவேற்ற தவறியதாக கூறி பயிற்சி மருத்துவா்கள் கொல்கத்தாவில் சனிக்கிழமை மாலை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

Updated On : 6 அக்டோபர், 2024 at 9:18 AM

பாதுகாப்பான பணிச்சூழல், மருத்துவா்களை தாக்கினால் உடனடி நடவடிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகளை மேற்கு வங்க அரசு 24 மணி நேரத்தில் நிறைவேற்ற தவறியதால் சனிக்கிழமை மாலை முதல் கால வரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவதாக அவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பயிற்சி மருத்துவா் ஒருவா் இன்று(அக். 6) கூறுகையில், “எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். நீயாயம் கிடைக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியும், இதுபோன்ற சம்பவங்கள் நிகழக்கூடாதென்பதை வலியுறுத்தியும் ஒவ்வொரு முறையும் போராட்டத்தை முன்னெடுக்கிறோம். அரசுக்கு 24 மணி நேரக் காலக்கெடு அளித்திருந்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. பொதுமக்களுக்கு எதிராக நாங்கள் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. நீதி கிடைக்கவே போராடுகிறோம்” என்றார்.

Advertisement

Updated On : 6 அக்டோபர், 2024 at 9:18 AM

மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக பொதுமக்களும் பிரபலங்களும் போராட்டக் களத்திற்கு சென்று தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.