ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், வினேஷ் போகத் முன்னிலை பெற்றுள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியாணா சட்டப்பேரவைகளுக்கு பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தேர்தலின் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படுகிறது.
இந்த நிலையில், ஹரியாணா பேரவைத் தோ்தலில் ஜுலானா தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தொடக்கம் முதல் முன்னிலை பெற்றுள்ளார்.
இவரை எதிர்த்து ஜுலானா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக முன்னாள் மல்யுத்த வீராங்கனை கவிதா தலாலும், பாஜக சாா்பில் முன்னாள் விமானி யோகேஷ் பைராகியும் போட்டியிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.