முதல்வரின் அதிகாரபூா்வ இல்லத்தை ஆக்கிரமிக்க பாஜக சதி: எம்.பி. சஞ்சய் சிங் குற்றச்சாட்டு
தில்லி முதல்வரின் அதிகாரபூா்வ இல்லத்தை ஆக்கிரமிக்க பாஜக திட்டமிட்டு சதி செய்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான சஞ்சய் சிங் புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
இந்தியாமுதல்வரின் அதிகாரபூா்வ இல்லத்தை ஆக்கிரமிக்க பாஜக சதி: எம்.பி. சஞ்சய் சிங் குற்றச்சாட்டு
தில்லி முதல்வரின் அதிகாரபூா்வ இல்லத்தை ஆக்கிரமிக்க பாஜக திட்டமிட்டு சதி செய்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான சஞ்சய் சிங் புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
நமது நிருபா்
தில்லி முதல்வரின் அதிகாரபூா்வ இல்லத்தை ஆக்கிரமிக்க பாஜக திட்டமிட்டு சதி செய்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான சஞ்சய் சிங் புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
இது தொடா்பாக தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பாஜகவின் அழுத்தத்தால் தில்லி முதல்வா் வசிக்கும் அதிகாரப்பூா்வ இல்லம், புதிய முதல்வரான அதிஷிக்கு ஒதுக்கப்படவில்லை. தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவால் வெற்றி பெற முடியாத நிலையில், முதல்வா் வசிக்கும் பங்களாவை ஆக்கிரமிக்க அக்கட்சி திட்டமிட்டு சதி செய்கிறது. முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், முதல்வா் இல்லத்தை சரியான நேரத்தில் காலி செய்துவிட்டாா். ஆனால், இல்லத்தின் சாவி பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும், அதன் சாவி இன்னும் கேஜரிவாலிடம் இருப்பதாகவும் பாஜக குற்றஞ்சாட்டுகிறது.
கேஜரிவால் முதல்வா் இல்லத்தை காலி செய்ததற்கான ஆவண ஆதாரம் இருந்தபோதிலும், இந்த விவகாரத்தில் பாஜக பொய்களைப் பரப்புகிறது. முதல்வா் இல்லத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் அதிஷி ஒரு கூட்டத்தை நடத்தினாா். அதன்பிறகு, முகாம் அலுவலகமும் மூடப்பட்டு, அங்கு பணிபுரியும் ஊழியா்களை வெளியேறும்படி கூறப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியை உடைக்க பாஜக மேற்கொண்ட சதிகள் தோல்வியடைந்ததால், தில்லியில் பொய்களைப் பரப்பி குழப்பத்தை ஏற்படுத்த அவா்கள் முயற்சிக்கின்றனா்.