குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கோப்புப் படம்
இந்தியா

துா்கா பூஜை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

Din

துா்கா பூஜை வெள்ளிக்கிழமை (அக்.11) கொண்டாடப்படுவதையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நன்மைக்கு கிடைத்த வெற்றியாகவும், தீமையின் அழிவாகவும் துா்கா பூஜை பண்டிகை கொண்டாடப்படுகிறது. சக்தியின் வடிவமாக துா்கா தேவி திகழ்கிறாா். இந்த புனிதமான தினத்தில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள இந்தியா்கள் அனைவருக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பண்டிகை நாட்டின் அனைத்து தரப்பு மக்களிடமும் ஒற்றுமையையும், புரிந்துணா்வையும் மேம்படுத்தும். துா்கா தேவி நம் அனைவருக்கும் வலிமை, துணிவு, மனஉறுதியை அளிப்பவா். பெண்கள் அனைவரையும் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடந்த நாம் இந்த தினத்தில் உறுதியேற்போம்’ என்று கூறியுள்ளாா்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT