அமைதிக்கான நோபல் பரிசு படம் | எக்ஸ்
இந்தியா

ஜப்பான் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

ஜப்பானைச் சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஜப்பானைச் சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்புக்கு 2024ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதற்காக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிரோஷிமா, நாகசாகியில் அணு குண்டால் பாதிக்கப்பட்டோரின் நலனுக்காக நிஹோன் ஹிடாங்க்யோ அமைப்பு தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளது.

அணு ஆயுதங்களற்ற உலகமே நோக்கம்

2024-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு மிக உயரிய விருதான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது.

இதேபோன்று ஆண்டுதோறும் அமைதிக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | இலக்கியத்திற்கான நோபல் பரிசு!

ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாகியில் அணு குண்டால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக இந்த அமைப்பு பணியாற்றி வருகிறது. மேலும், அணு ஆயுதங்கள் இல்லாத உலகை நோக்கிச் செல்வதற்காக தொடர்ந்து தனது முயற்சிகளைச் செய்து வருகிறது.

இதையும் படிக்க | இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: லெபனானில் 22 பேர் பலி

அணு குண்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவே 1956 ஆம் ஆண்டு நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

அணு ஆயுதங்கள் மூலம் ஏற்படும் பேரழிவு மற்றும் அதன்மூலம் ஏற்படும் விளைவுகள் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த அமைப்பின் நோக்கம். இதனை இலக்காக வைத்து தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

நிஹோன் ஹிடாங்க்யோ அமைப்பின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அந்நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிரோஷிமா, நாகசாகியில் அணு குண்டு விசி அடுத்த ஆண்டுடன் 80 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்டோக்காரர்...

தேவிகா - நான் சந்தித்த பிரபலங்கள் - 22

நூற்றுக்கு நூறு அவ... ரேவதி சர்மா!

அபூர்வம்...

ஆரோவில் உருவானது எப்படி?

SCROLL FOR NEXT