முகப்பு
இந்தியா

கரோனா தடுப்பூசியின் பக்கவிளைவு: மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

கோவிட்-19 தடுப்பூசிகளின் பக்கவிளைவுகள் தொடர்பான பொதுநலன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

Updated On : 14 அக்டோபர், 2024 at 11:52 AM
கரோனா தடுப்பூசி
பகிர்:
Updated On : 14 அக்டோபர், 2024 at 11:52 AM

கரோனா தடுப்பூசிகளின் பக்கவிளைவுகள் தொடர்பான பொதுநலன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

கரோனா தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டதால் மக்களுக்கு இரத்தம் உறைதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுவதாகக் கூறும் பொதுநலன் மனுவை உச்ச நீதிமன்றம் திங்களன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே பி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, மக்கள் மற்றும் ஊடரங்களுக்கு மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தவே இந்த பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்வதாகக் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

மேலும், கரோனா தடுப்பூசி போடாமல் இருந்திருந்தால் எந்தவிதமான பக்கவிளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வது, வெறும் பரபரப்பைத்தான் ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.