உச்சநீதிமன்றம்  
இந்தியா

கரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

கரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி

DIN

புது தில்லி: கரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

இதுதொடா்பாக பிரியா மிஸ்ரா என்பவா் உள்பட பலா் தாக்கல் செய்த மனுவில், கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டதால், பலருக்கு ரத்தம் உைல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாமல் இருந்திருந்தால் என்ன பக்க விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதையும் மனுதாரா்கள் புரிந்துகொள்ள வேண்டும்’ என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT