வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ராகுலுடன் பிரியங்கா காந்தி  
இந்தியா

வயநாடு இடைத்தோ்தலில் பிரியங்கா போட்டி: காங்கிரஸ்

வயநாடு மக்களவைத் தொகுதியில் நவ. 13-ஆம் தேதி வாக்குப்பதிவு

DIN

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் அக்கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி போட்டியிடுவாா் என்று அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மக்களவைத் தோ்தலில் கேரளத்தின் வயநாடு மற்றும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றாா்.

இதையடுத்து விதிகளின்படி, வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ராகுல், ரேபரேலியைத் தக்கவைத்தாா்.

இந்நிலையில், வயநாடு தொகுதியில் நவ. 13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் சாா்பில் கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி போட்டியிடுவாா் என்று அதிகாரபூா்வ அறிவிப்பை கட்சியின் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

இதன்மூலம், தோ்தலில் முதன்முறையாக பிரியங்கா காந்தி களமிறங்கியிருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பராசக்தியில் நடித்தது வாழ்நாள் பெருமை: சிவகார்த்திகேயன்

ஈரான் - அமெரிக்கா மோதலால் வளைகுடா நாடுகளுக்கு தீவிர பாதிப்பு - கத்தார் எச்சரிக்கை!

“ஜல்லிக்கட்டுனா.. எங்க ஊரு கயிறுதான்!” விறுவிறுப்பாக நடைபெறும் மூக்கணாங்கயிறு விற்பனை!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.90.21ஆக நிறைவு!

மன அழுத்தம்... உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

SCROLL FOR NEXT