இந்தியா

'எனக்கு பெண் பாருங்கள்'- பாஜக எம்எல்ஏ-விடம் கோரிக்கை வைத்த நபர்!

உத்தர பிரதேச பாஜக எம்எல்ஏவிடம், தனக்கு பெண் பார்க்கும்படி பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் கேட்ட விடியோ வைரல்.

DIN

உத்தர பிரதேச பாஜக எம்எல்ஏவிடம், தனக்கு பெண் பார்க்கும்படி பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் கேட்ட விடியோ வைரலாகி வருகிறது.

உத்தர பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்கில், தனது காருக்கு பெட்ரோல் போடுவதற்காக பாஜக எம்எல்ஏ பிரஜ்பூஷண் ராஜ்புத் சென்றுள்ளார்.

அவரைக் கவனித்த ஊழியர் ஒருவர், எம்எல்ஏவிடம் நேரடியாக சென்று, தான் திருமணம் செய்துகொள்ள ஒரு பெண் பார்த்துத் தரும்படி கேட்டுள்ளார்.

உடனே எம்எல்ஏ காரில் இருந்தபடியே, 'இதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்?' என்று கேட்டுள்ளார். அதற்கு ஊழியர், 'நான் உங்களுக்கு வாக்களித்தேன், அதனால்தான் நீங்கள் வெற்றி பெற்றுளீர்கள். எனவே, நீங்கள்தான் எனக்கு திருமணம் நடத்திவைக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

'உங்களுக்கு வருமானம் என்ன?' என்று எம்எல்ஏ கேட்க, மாதம் 6,000 ரூபாய் பெறுவதாகவும் 8 ஏக்கர் நிலம் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

எம்எல்ஏவும் வேடிக்கையாக, 'நீங்கள் சற்று செல்வந்தர்தான். பொருத்தமான பெண்ணைத் தேடுகிறேன்' என்று ஊழியரிடம் உறுதியளித்துள்ளார்.

'உங்களது சாதியில்தான் பெண் வேண்டுமா? அல்லது வேறு சாதி பெண்ணை ஏற்றுக்கொள்வீர்களா?' என கேட்டதற்கு, ஊழியர் தனது சொந்த சாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த எம்எல்ஏ, சாதி பார்க்காமல் பெண் தேடுங்கள் என்று கூறி, 'நானும் பார்க்கிறேன். உங்களுக்கான பெண் உங்களைத் தேடி வருவாள்' என்று கூறியுள்ளார்.

எம்எல்ஏவும் ஊழியரும் பேசும் இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சான்றளிக்கப்பட்ட பட்டாசு... சாய் தமாங்கர்

தீபாவளி ஸ்பெஷல்தான்... அவ்னீத் கௌர்!

கிரே இன் யெல்லோ... விஷ்ணுபிரியா!

நீலக்குயில்... மௌனி ராய்!

செல்லச் சிரிப்பு... அனைரா குப்தா!

SCROLL FOR NEXT