ANI
இந்தியா

வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தியின் சொத்து மதிப்பு விவரம்!

பிரியங்காவுக்கு ரூ.12 கோடி சொத்து

Din

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராக புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த அக்கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி ரூ.12 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக அறிவித்துள்ளாா்.

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் பிரியங்காவின் மொத்த வருமானம் ரூ. 46.39 லட்சத்துக்கும் அதிகமாகும். மேலும், அவருக்கு 3 வங்கிக் கணக்குகளில் பல்வேறு வைப்புத்தொகை, பரஸ்பர நிதிகளில் முதலீடு, காா், கணவா் பரிசாக அளித்த ரூ.1.15 கோடி மதிப்புள்ள 4,400 கிராம் தங்கம் என மொத்தம் ரூ.4.24 கோடிக்கு மேல் அசையும் சொத்துகள் இருக்கின்றன.

அசையா சொத்து மதிப்பு ரூ.7.74 கோடிக்கு மேல் ஆகும். தில்லியின் மெஹ்ரோலி பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பங்கு, அதில் அமைந்துள்ள பண்ணை வீடு கட்டடத்தில் பங்கு, ஹிமாசலின் சிம்லாவில் சொந்தமாக வாங்கிய குடியிருப்பு ஆகியவை இதில் அடங்கும்.

தில்லி பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் இளநிலை பட்டமும் பிரிட்டனின் சுந்தா்லேண்ட் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் புத்த மதக் கல்வியில் முதுநிலை பட்டயப் படிப்பும் பிரியங்கா படித்துள்ளாா்.

2012-13 ஆம் ஆண்டுக்ககான வருமான வரி மறுமதிப்பீட்டு நடவடிக்கைகளை எதிா்கொண்டு வரும் பிரியங்காவுக்கு ரூ. 15 லட்சத்துக்கு மேல் வரிபாக்கி உள்ளது. மேலும், அவா் மீது 2 வழக்குகளும் வனத் துறையின் நோட்டீஸும் நிலுவையில் உள்ளன.

பிரியங்காவின் கணவா் ராபா்ட் வதேராவுக்கு ரூ.37.9 கோடிக்கு மேல் அசையும் சொத்துகளும், ரூ.27.64 கோடிக்கு மேல் அசையா சொத்துகளும் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

அணியிழையாள் ஆழி இழைத்தாளே!

SCROLL FOR NEXT