நோயல் டாடா 
இந்தியா

நோயல் டாடா, டாடா சன்ஸ் தலைவராக முடியாது! ரத்தன் டாடா உருவாக்கிய விதிமுறை

ரத்தன் டாடா உருவாக்கிய விதிமுறையால், நோயல் டாடா, டாடா சன்ஸ் தலைவராக ஆக முடியாது என்று தகவல்.

DIN

ரத்தன் டாடா மறைவுக்குப் பிறகு, அவரது சகோதரர் நோயல் டாடா, டாடா அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் டாடா சன்ஸ் தலைவராக முடியாது என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, கடந்த 2022ல் ரத்தன் டாடா உருவாக்கிய விதியின் காரணமாக, நோயல் டாடா, டாடா சன்ஸ் தலைவராக முடியாது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

டாடா நிறுவனங்களையும் தாண்டி, 10க்கும் மேற்பட்ட டாடா நிறுவனங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் டாடா சன்ஸ் தலைவராக, நோயல் டாடா எப்போதும் ஆக முடியாது என்றும் கூறப்படுகிறது.

நோயல் டாடா, டாடா சன்ஸ் தலைவராக முடியாமல் போவது இது ஒன்றும் புதிதல்ல. 13 ஆண்டுகளுக்கு முன்பும் கூட, அவர் டாடா சன்ஸ் தலைவராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அப்பதவியை அடைய முடியாமல் போனது.

2011ஆம் ஆண்டு, டாடா சன்ஸ் தலைவர் பதவியிலிருந்து ரத்தன் டாடா விலகிய போதும், நோயல் டாடா, தலைவர் பதவிக்கு தகுதியுடையவர் என பேசப்பட்டது. ஆனால், அப்போதும், அந்தப் பதவி நோயல் டாடாவுக்கு வழங்கப்படாமல், அவரது உறவினர் சைரஸ் மிஸ்திரிக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் பல குழுமங்களுக்கும் அறக்கட்டளைகளுக்கும் தலைவர்கள் நியமிக்கப்படும் போதெல்லாம், நோயல் டாடா, டாடா சன்ஸ் தலைவராவாரா என்று கேள்வி எழுவதும். ஆனால், ஆகாமல் போவதும் தொடர்கதையாகி இருந்து வந்த நிலையில், இப்போதும் அதுவே தொடர்ந்துவிட்டது.

அதாவது, ரத்தன் டாடா தலைமையின் கீழ் டாடா குழுமம் இருந்த போது, 2022ஆம் ஆண்டு ஒரு புதிய விதிமுறை உருவாக்கப்பட்டது. அதாவது, டாடா சன்ஸ் மற்றும் டாடா அறக்கட்டளையின் தலைவர்களாக ஒரே நேரத்தில் ஒரே நபர் இருக்கக் கூடாது என்பதே அந்த விதி.

எனவே, டாடா அறக்கட்டளையின் தலைவராக இருக்கும் நோயல் டாடா, டாடா சன்ஸ் தலைவராக முடியாது. கடைசியாக, டாடா சன்ஸ் மற்றும் டாடா அறக்கட்டளையின் தலைவர்களாக ஒரே நேரத்தில் ஒருவரே இருந்தார் என்றால் அது ரத்தன் டாடா தான்.

இந்த விதிமுறை உருவாகக் காரணம், டாடா சன்ஸ், அனைத்துடாடா குழும நிறுவனங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், குறிப்பிட்ட பங்கும் கைவசம் இருக்கும். டாடா அறக்கட்டளை டாடா சன்ஸ்-ன் 66 சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும். இதன்படி பார்த்தால், டாடா அறக்கட்டளையின் தலைவர் கிட்டத்தட்ட டாடா சன்ஸ் மீது அதிக ஆதிக்கம் கொண்டவராக இருப்பார். எனினும், டாடா சன்ஸ் தலைவருக்குத்தான் குழும நிறுவனங்களின் மீது நேரடியான அதிகாரம் இருக்கும். எனவேதான், டாடா அறக்கட்டளையின் தலைவராக இருக்கும் ஒருவர், அதே நேரத்தில், டாடா சன்ஸ் தலைவராக முடியாது என்ற விதியை ரத்தன் டாடா உருவாக்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மியான்மரில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு!

அமித் ஷா மீது தூக்கியெறியப்பட்ட மசோதா நகல்கள்!செய்திகள்: சில வரிகளில் | 20.8.25 | TVKVIJAY | BJP

தவெக மாநாடு! 100 அடி கொடிக் கம்பம் சாய்ந்தது... கார் சேதம்!

மதுரை தவெக மாநாட்டுக்காக வீதிகளில் பிரசார வாகன உலா!

கண்கள் கவரும்... ஷெஹனாஸ்!

SCROLL FOR NEXT