சலூன் கடையில் ராகுல் காந்தி.. 
இந்தியா

சலூன் கடைக்காரரிடம் உரையாடும் ராகுலின் விடியோ வைரல்!

சலூன் கடைக்காரரிடம் உரையாடும் விடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், ராகுல்.

DIN

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஒரு சலூன் கடையில் சவரம் செய்யும்போது கடைக்காரரான அஜித்துடன் உரையாடல் குறித்த விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விடியோவில் ``நாள் முழுவதும் உழைத்தாலும், நாளின் இறுதியில் சேமிக்கக்கூடிய வகையில் எதுவும் மிஞ்சவில்லை’’ என்று ராகுலிடம் அஜித் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

ராகுல் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது, ``அஜித் கூறிய `எதுவும் மிச்சமில்லை’ என்ற வார்த்தைகளும், அவரது நம்பிக்கைகளும் இந்தியாவில் உழைக்கும் ஒவ்வொரு ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் நிலைமையை எடுத்துரைக்கின்றன.

முடி திருத்துபவர்கள் முதல் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள், குயவர்கள், தச்சர்கள் வரையிலான தொழிலாளர்களின் கடை, வீடு மற்றும் சுயமரியாதையை, இந்தியாவின் வீழ்ச்சியடைந்த வருமானம் மற்றும் பணவீக்க அதிகரிப்புதான் கொள்ளையடித்துள்ளன.

தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்கும் மற்றும் குடும்பங்களுக்கு சேமிப்பை மீண்டும் கொண்டு வரும் புதிய திட்டங்களும் நவீன தீர்வுகளும்தான் இன்று தேவை’’ என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழையன கழிதல்!

சா்க்கரை ஆலைக்கு தலைமை நிா்வாகியை நியமிக்க வலியுறுத்தல்

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் தேரோட்டம்

கம்பெனி முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் நீதிபதி தலையீடு: என்சிஎல்ஏடி உறுப்பினா் விலகல்

வட்டவிளை ரேஷன் கடை முன் பொதுமக்கள் முற்றுகை

SCROLL FOR NEXT