ANI
இந்தியா

மகாராஷ்டிர தேர்தல்: காங்கிரஸ் இன்று முக்கிய ஆலோசனை!

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து தில்லியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது.

DIN

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து தில்லியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது.

மகாராஷ்டிரத்தில் 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. நவ. 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதையொட்டி கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், ட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்பொருட்டு தில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.

கடந்த அக். 24 ஆம் தேதி, 48 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. மீதியுள்ள தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.

கட்சியின் மாநிலத் தலைவர் நானா படோல் சகோலி தொகுதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான் காரட் தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

மகாராஷ்டிரத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணி தொகுதிப் பங்கீடு ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, காங்கிரஸ், சிவசேனை (யுபிடி), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) ஆகிய 3 கட்சிகளும் தலா 85 இடங்களில் போட்டியிடும் என்றும் மீதமுள்ள 23 இடங்களில் அந்தந்த கட்சி வேட்பாளர்கள் பட்டியலின் அடிப்படையில் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் வாக்குத் திருட்டு ஆதாரமற்றது, நாட்டை அவமதிக்கும் முயற்சி: பாஜக

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

SCROLL FOR NEXT