காங்கிரஸ் 
இந்தியா

மகாராஷ்டிர தேர்தல்: காங்கிரஸின் 2-ஆம் கட்ட பட்டியல் வெளியீடு!

23 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாம் கட்ட பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பிடிஐ

மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலைக் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. நவ. 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்

கடந்த அக். 24ஆம் தேதி, 48 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலைக் காங்கிரஸ் வெளியிட்டது. இந்த நிலையில் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி கூடித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் குறித்து ஆலோசித்ததையடுத்து 23 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாம் கட்ட பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலுடன் மொத்தம் இதுவரை 71 வேட்பாளர்களைக் காங்கிரஸ் அறிவித்துள்ளது. எதிர்க்கட்சி தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் 25 எம்எல்ஏக்களை தக்கவைத்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணி தொகுதிப் பங்கீடு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காங்கிரஸ், சிவசேனை (யுபிடி), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) ஆகிய 3 கட்சிகளும் தலா 85 இடங்களில் போட்டியிடும் என்றும் மீதமுள்ள 23 இடங்களில் அந்தந்த கட்சி வேட்பாளர்கள் பட்டியலின் அடிப்படையில் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்க டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு! மீண்டும் அணிக்குத் திரும்பிய ரிஷப் பந்த்!

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்மார்ட் வாட்ச்சில் இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் - எப்படி?

ஒரு நாள் அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பில்லை!

வெற்றி உரையில் நேருவை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

SCROLL FOR NEXT