முகப்பு
இந்தியா

அரசியல் சாசனத்தை சீர்குலைக்கிறது பாஜக: வயநாட்டில் பிரியங்கா காந்தி பிரசாரம்

அரசியல் சாசன மதிப்பீடுகளை மத்திய பாஜசு அரசு தொடர்ந்து சீர்குலைத்து வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டினார்.

Updated On : 3 நவம்பர், 2024 at 4:32 AM
பிரியங்கா காந்தி
பகிர்:

அரசியல் சாசன மதிப்பீடுகளை மத்திய பாஜசு அரசு தொடர்ந்து சீர்குலைத்து வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டினார்.

கேரள மாநிலம், வயநாடு மக்களவைத்தொகுதி இடைத் தேர்த லில் போட்டியிடும் அவர், மீனங் காடி பகுதியில் தனது இரண்டாம் கட்டப் பிரசாரத்தை திங்கள்கி ழமை தொடங்கி வைத்துப் பேசியதாவது: சமூகத்தில் அச்சம், கோபம், துன்பம் ஆகியவற்றை மத்திய பாஜக அரசு பரப்பி வருகிறது.

சிறுபான்மை இனத்தவருக்கு எதி ராக தாக்குதல்கள் நடப்பதை நீங்கள் கண்டீர்கள். மணிப்பூரில் நடைபெற்ற தாக்குதல்களையும் கண்டீர்கள். திட்டமிடப்பட்ட வகையில் கோபமும், வெறுப்பும் பரப்பப்படுகின்றன.

சாமானிய மக்களுக்குப் பயன்படும் வகையில் அல்லாமல் பிரதமர் நரேந்திர மோடியின் பணக்கார நண்பர்களுக்கு நன்மை பயக்கவே கொள்கைகள் வகுக்கப்படு கின்றன. இரவு, பகலாக உழைக்கும் விவசாயிகள் மீது இரக்கம் காட்டப்படுவதில்லை. பழங்குடி இனத்தவர் குறித்த புரிதல் இல்லை. பணக்காரர்களுக்காக அவர்களது நிலங்கள் பறிக்கப்படுகின்றன.

வயநாடு தொகுதியை கனத்த இதயத்துடன் ராகுல் காந்தி விட்டுக்கொடுத்தார். எனது சகோதரரான அவர் மீதான அன்பு காரணமாகவே நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்கள் அனைவர் மீதும் ராகுலுக்கு ஆழமான உறவு உள்ளது. நமது அரசியல் சாசன மதிப்பீடுகளை மத்திய பாஜக அரசு தொடர்ந்து சீர்குலைத்து வருகிறது.

அரசியல் சாசனத்தைப்பாது காக்கவே நாங்கள் போராடி வருகிறோம். நமது ஜனநாயகத்தையும், சமத்துவத்தையும் பாதுகாக்க போராடுகிறோம். நீங்கள் ஒவ்வொருவரும் இந்தப் போராட்டத்தில் முக்கியமான படைவீரர்கள். வயநாடு தொகுதியின் எம்.பி.யாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், தொகுதி மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கப் போராடுவேன் என்றார்.

இதைத் தொடர்ந்து வயநாடு தொகுதியில் உள்ள பனமரம், பொழுதானா உள்ளிட்ட பகுதிகளில் பிரியங்கா பிரசாரம் செய்தார். இந்தக் கூட்டங்களில் அவரது சகோதரர் ராகுல் காந்தி, தாயார் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இதனிடையே, பிரியங்கா காந்தி, எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், கடந்த காலங்களில் உண்மை, நீதி, ஜனநாயகம் ஆகியவற்றின் பக்கம் வயநாடு மக்கள் நின்றனர்.

அரசியல் சாசனத்தை வலுப்படுத்த அவர்கள் பாடுபட்டனர். அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் வலுப்படுத்த அவர்கள் தொடர்ந்து உழைப்பார்கள். வளர்ச்சிக்கான புதிய அத்தியாயத்தை அவர்கள் எழுதுவார்கள். இங்கு மக்களின் ஆர்வம் உற்சாகமளிக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →