முகப்பு
இந்தியா

மணிப்பூர்: தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த 8 பேர் ஆயுதங்களுடன் கைது!

மணிப்பூரில் தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த 8 பேர் கைது.

Updated On : 29 அக்டோபர், 2024 at 6:50 AM
பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்
பகிர்:

மணிப்பூரில் தடை செய்யப்பட்ட அமைப்பான ஐக்கிய விடுதலை முண்னணியைச் (பம்பேய்) சேர்ந்த 8 நபர்கள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.

மணிப்பூர் மாநில தௌபால் மாவட்டத்தில் எல்லைப் பிரிக்கும் செயல்முறையைத் தடுத்து நிறுத்த முயன்ற ஐக்கிய விடுதலை முண்னணியைச் (பம்பேய்) சேர்ந்த 8 நபர்கள் நேற்று காலவ்துறையினரால் கைது செய்யப்பட்டதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அவர்களிடமிருந்து 3 ஏகே 47 ரைஃபில்கள், 2 ஏகே 56 ரைஃபில்கள், 1 பிஸ்டல், 147 ஏகே 47 துப்பாக்கி குண்டுகள், 20 எம்-16 துப்பாக்கி குண்டுகள், 25 பிஸ்டல் குண்டுகள், வெடிமருந்துகள், 16 கைப்பேசிகள், 1 எஸ்யூவி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தக் குழுவினர் பயங்கரவாத செயல்களில் ஈடுபடமாட்டோம் என கடந்தாண்டு மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, இம்பால் மேற்கில் உள்ள டாப் லீராக் மச்சின் பகுதியில் தடைசெய்யப்பட்ட மக்கள் விடுதலைப் படையைச் சேர்ந்த நபர் ஒருவரை நேற்று (அக். 28) போலீஸார் கைது செய்தனர்.

அந்த நபர் இம்பால் பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →