மகாராஷ்டிர சட்டப்பேரவை PTI
இந்தியா

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் 7,995 வேட்பாளர்கள் மனுத்தாக்கல்!

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் 7,995 போட்டியிடவுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

DIN

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் 7,995 போட்டியிடவுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

288 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில் ஒரு தொகுதிக்கு சராசரியாக 38 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நவ. 4-ல் இறுதிப் பட்டியல்

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.அனைத்து வாக்குகளும் நவம்பர் 23-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

மகாராஷ்டிரத்தில் ஆளும் மகாயுதியில் பாஜக, ஷிண்டே பிரிவு சிவசேனை, அஜித்பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடையே வேட்பு மனுத் தாக்கல் கடைசி நிமிடம் வரை தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது.

மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனை, சரத் பவார் பிரிவிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

இதோடு மட்டுமின்றி வன்சித் பகுஜன் அகாதி, மகாராஷ்டிரா நவ்நிர்மன் சேனா, அகில இந்திய மஜ்லீஸ் - இ - இத்தாஹாதுல் முஸ்லீமின் கட்சியும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது,

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனைக்குப் பிறகு நவம்பர் 4ஆம் தேதி வேட்புமனுக்களின் இறுதிப் பட்டியல் வெளியாகும், இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்து தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT