முதல்வர் சித்தராமையா (கோப்புப் படம்) 
இந்தியா

சித்தராமையாவுக்கு பதிலாக முதல்வராக? கர்நாடக காங்கிரஸ் குழப்பம்

சித்தராமையாவை மாற்றுவது குறித்து கட்சிக்குள் பிரச்னை ஏற்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தகவல்

DIN

கர்நாடக முதல்வரை மாற்றுவது குறித்து கட்சிக்குள் பிரச்னை ஏற்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகத்தில் முடா இட ஒதுக்கீடு பிரச்னை தொடர்பாக, முதல்வர் சித்தராமையாவை மாற்றுவது குறித்து காங்கிரஸுக்கு தொடர்ந்து அழுத்தம் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சித்தராமையாவுக்கு பதிலாக, வேறொருவரை மாற்றுவதாக இருந்தால், துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் அல்லது பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோலிக்கு ஆகியோருக்குதான் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.

கட்சிக்குள் ஒருமித்த கருத்து தோன்றினால், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஆதரவாக ஓர் அணியினரும், சதீஷ் ஜர்கிஹோலிக்கு ஆதரவாக ஓர் அணியினரும் பிரியலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

முதல்வர் சித்தராமையாவுக்கு அடுத்ததாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சக்திவாய்ந்த தலைவராகவும், எஸ்.டி. சமூகத்தைச் சேர்ந்த 15 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டுள்ளார், சதீஷ் ஜர்கிஹோலி.

அதுமட்டுமின்றி, கடந்த ஞாயிற்றுக்கிழமையில் (செப். 1) ராகுல் காந்தி உள்பட கட்சித் தலைவர்களை ஜர்கிஹோலி, சித்தராமையா, டி.கே. சிவக்குமார் ஆகியோர் சந்தித்துள்ளனர்.

சந்திப்பின்போது, ஜார்க்கிஹோலியுடன் ராகுல் காந்தி மாநிலத்தின் அரசியல் முன்னேற்றங்கள் குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், நிலைமை தேவைப்பட்டால், சித்தராமையாவுக்கு பதிலாக யார் மாற்றப்பட வேண்டும் என்பது குறித்து, ராகுலும் பிற தலைவர்களும் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

SCROLL FOR NEXT