இந்தியா

ஆன்லைன் நண்பரால் 20 நாள்களாக அடைத்து வைக்கப்பட்ட பெண்!

பெண்ணை மீட்ட காவல்துறையினர் கடத்தியவரையும் கைது செய்தனர்

DIN

ஆன்லைன் நண்பரால் கடத்தப்பட்ட பெண்ணை மீட்ட காவல்துறையினர், கடத்தியவரையும் கைது செய்தனர்.

ஹைதராபாத்தில் 18 வயது பெண் ஒருவர், சமூக ஊடகம் மூலம் பழக்கமான 19 வயதுடைய இளைஞரின் அழைப்பை ஏற்று, அவரை சந்திக்கச் சென்றுள்ளார். ஆனால் சந்திப்பின்போது, சிறுமியை அந்த இளைஞர், ஒரு ஹோட்டல் அறையில் வைத்து பூட்டியுள்ளார்.

இதனையடுத்து, தங்களது மகள் காணாமல் போய்விட்டதாகக் கூறி, அவரது பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில், தன்னை ஒருவர் அடைத்து வைத்திருப்பதாகவும், தான் இருக்குமிடம் குறித்தும் தனது பெற்றோருக்கு மொபைல் போனில் குறுஞ்செய்தி மூலம், சுமார் 20 நாள்களுக்கு பிறகு தகவல் அளித்துள்ளார், அந்தப் பெண். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், பெண்ணை மீட்டதுடன், அடைத்து வைத்திருந்த இளைஞரை கைது செய்து, அவர்மீது வழக்குப்பதிவும் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1,751 கிலோ தடைசெய்யப்பட்ட பட்டாசுகள் பறிமுதல்: 7 போ் கைது

வாக்கு திருட்டு வெற்றிபெற அனுமதிக்க மாட்டோம்: தேவேந்தா் யாதவ் உறுதி

நூதன மோசடி: நூஹ் பகுதியைச் சோ்ந்த ஒருவா் கைது

போதைப்பொருள் வழக்கில் தென்னாப்பிரிக்க நாட்டவருக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

மழைவெள்ள நீரில் மூழ்கி இறந்தவரின் குடும்பத்தினரை சந்தித்த ஆம் ஆத்மி குழு!

SCROLL FOR NEXT