இந்தியா

நாட்டின் பாதுகாப்பை ராகுல் அச்சுறுத்துகிறார்: அமித் ஷா

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ராகுல் செயல்படுவதாக அமித் ஷா குற்றச்சாட்டு

DIN

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ராகுல் காந்தி செயல்படுவதாக அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, இட ஒதுக்கீடு குறித்து பேசிய கருத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில், ``நாட்டைப் பிளவுபடுத்த சதி செய்யும் சக்திகளுடன் நிற்பதும், தேசவிரோத அறிக்கைகளை வெளியிடுவதுமே, ராகுல் காந்திக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு பழக்கமாகிவிட்டது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள தேசிய மாநாடு கட்சியின் தேச விரோத மற்றும் இடஒதுக்கீடு எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை ஆதரிப்பது அல்லது வெளிநாட்டு தளங்களில் இந்தியாவுக்கு எதிரான அறிக்கைகளை வெளியிடுவது என எதுவாக இருந்தாலும், ராகுல் காந்தி எப்போதும் நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்துகிறார்.

பிராந்தியவாதம், மதம், மொழியியல் வேறுபாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தும் காங்கிரஸின் அரசியலை, ராகுல் காந்தியின் அறிக்கை அம்பலப்படுத்தி விட்டது.

நாட்டில் இடஒதுக்கீட்டை ஒழிப்பது பற்றி பேசுவதன் மூலம், இடஒதுக்கீட்டிற்கு எதிரான காங்கிரஸின் முகத்தை, முன்னணியில் கொண்டு வந்துள்ளார், ராகுல். அவரது மனதில் இருந்த எண்ணங்கள் இறுதியில் வார்த்தைகளாக வெளிப்பட்டன.

பாஜக இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் ரத்து செய்ய முடியாது; மேலும், நாட்டின் பாதுகாப்பை யாரும் சீர்குலைக்க முடியாது என்று ராகுலுக்கு சொல்ல விரும்புகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, அந்நாட்டு தலைநகா் வாஷிங்டனில் உள்ள ஜாா்ஜ்டவுன் பல்கலைக்கழக மாணவா்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது, ``பாகுபாடு இல்லாத இந்தியா உருவாகும்போது இடஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் சிந்திக்கும். ஆனால் அந்தச் சூழல் தற்போது இல்லை’’ என்று கூறியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரவைத் தோ்தலில் போட்டியிட திமுகவிடம் 5 இடங்கள் கேட்போம்: முஸ்லீம் லீக் தலைவா் காதா்மைதீன்

வானவில் மன்றத்தில் அறிவியல் விழிப்புணா்வு செயல்பாடுகளை மேற்கொள்ள முடிவு!

குடிநீா் பிரச்னையை சீா் செய்யாவிட்டால் மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம்

கந்தா்வகோட்டை வட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தூய்மைப் பணி

திருச்சி காப்புக்காடுகளில் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT