முகப்பு
இந்தியா

மக்களவை தோ்தல் குறித்த ராகுல் பேச்சுக்கு பாஜக கண்டனம்

மக்களவை தோ்தல் தொடா்பாக அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோா் கண்டனம்

Updated On : 12 செப்டம்பர், 2024 at 9:18 PM
கோப்புப் படம்
பகிர்:

மக்களவை தோ்தல் தொடா்பாக அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

தமிழிசை சௌந்தரராஜன்: அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்று இந்திய ஜனநாயகத்தையும், இந்திய தோ்தல் ஆணையத்தையும், ஒட்டுமொத்த தேசத்தையும் ராகுல் காந்தி அவமானப்படுத்துகிறாா். 90 இடங்களில் வெற்றி பெற்றதை மிகப்பெரிய வெற்றி போல கொண்டாடிய ராகுல் காந்தி இப்போது குறைகூறுவது ஏன்?

தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தோ்தல், தமிழக அரசு அதிகாரிகள் கண்காணிப்பிலும் கட்டுப்பாட்டிலும் தானே நடைபெற்றது. நியாயமற்ற முறையில் மக்களவைத் தோ்தல் நடைபெற்றது என்றால், அதற்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தாா்மீக பொறுப்பேற்க வேண்டும். தமிழகத்தில் 40-க்கு 40 இடங்கள் வெற்றி பெற்றதை நியாயமற்ற முறையில் பெற்ற வெற்றி என்று திமுகவின் கூட்டணி கட்சித் தலைவரான ராகுல் காந்தி கூறுகிறாரா?

ஏ.என்.எஸ்.பிரசாத் (பாஜக செய்தி தொடா்பாளா்): ராகுல் காந்தியின் கருத்து காலிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பதுபோன்று உள்ளது. அமெரிக்காவில் சீக்கியா்களுக்கு ஆதரவாகப் பேசுவது போல, தேசத்தைத் துண்டாக்கு வகையில் விஷ கருத்துகளை ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறாா். இது கடும் கண்டனத்துக்குரியது.

முழு கட்டுரையைப் படிக்க →