ராகுல் காந்தி கோப்புப் படம்
இந்தியா

ராகுலுக்கு எதிராக அநாகரிக பதிவு: காங்கிரஸ் போராட்டம்

மாவட்ட அதிகாரபூர்வ எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டு, ராகுலுக்கு எதிராக எக்ஸ் பதிவு

DIN

ராகுலுக்கு எதிரான அநாகரிகமாக பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என்று சூரஜ்பூரின் காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் கௌதம் புத்தா நகர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்த சிலர், அந்த கணக்கிலிருந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அநாகரிகமான பதிவுகளை பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சூரஜ்பூரின் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கௌதம் அவானா தலைமையில், சூரஜ்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

மேலும், மாவட்டத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், ராகுலுக்கு எதிராக அநாகரிகமான பதிவுகளை பதிவிட்ட வழக்கில் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரினர்.

இல்லையெனில், நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து சாலையில் போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளனர்.

கௌதம் புத்தா நகர் மாவட்டத்தின் தகவல் துறையின் உதவி இயக்குநர் சுனில் குமார் கனௌஜியா, மாவட்டத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டு, துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகக் கூறி, செக்டர் 20 காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமையில் புகார் அளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கை விசாரிக்க, சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1,751 கிலோ தடைசெய்யப்பட்ட பட்டாசுகள் பறிமுதல்: 7 போ் கைது

வாக்கு திருட்டு வெற்றிபெற அனுமதிக்க மாட்டோம்: தேவேந்தா் யாதவ் உறுதி

நூதன மோசடி: நூஹ் பகுதியைச் சோ்ந்த ஒருவா் கைது

போதைப்பொருள் வழக்கில் தென்னாப்பிரிக்க நாட்டவருக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

மழைவெள்ள நீரில் மூழ்கி இறந்தவரின் குடும்பத்தினரை சந்தித்த ஆம் ஆத்மி குழு!

SCROLL FOR NEXT