அமித் ஷா Center-Center-Delhi
இந்தியா

அனைத்து இந்திய மொழிகளுடனும் ஹிந்திக்கு பிரிக்க முடியாத உறவு உள்ளது: அமித் ஷா

அனைத்து இந்திய மொழிகளுடனும் ஹிந்திக்கு பிரிக்க முடியாத உறவு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

DIN

அனைத்து இந்திய மொழிகளுடனும் ஹிந்திக்கு பிரிக்க முடியாத உறவு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஹிந்தி அறிவிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அதில், “அனைத்து இந்திய மொழிகளும் நமக்கு பெருமையும் பாரம்பரியமுமானவை. அவற்றை வளப்படுத்தாமல் நாடு முன்னேற முடியாது. அதிகாரப்பூர்வ மொழியான ஹிந்தி அனைத்து இந்திய மொழிகளுடனும் பிரிக்க முடியாத உறவைக் கொண்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இந்த ஆண்டுடன் பொதுத் தொடர்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஹிந்தி அறிவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து இந்திய மொழிகளையும் ஒன்றிணைத்துக் கொண்டு செல்வதற்கும், மேம்பட்ட இந்தியாவின் வளர்ச்சியை நிறைவேற்றுவதற்கும் அதிகாரப்பூர்வ மொழியான ஹிந்தி தொடர்ந்து பங்களிக்குமென்று நான் நம்புகிறேன்” என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றி மாறன் படத்தின் பெயர் அறிவிப்பு! வடசென்னை உலகில் சிலம்பரசன்!

பிகார் தேர்தலில் போட்டியிடுவது உறுதி! பிரசாந்த் கிஷோர்

நவம்பர் 1 முதல் நடுத்தர, கனரக வாகனங்களுக்கு 25% வரி!

உச்சநீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT