போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்கள்... பிடிஐ
இந்தியா

மமதா மீது மருத்துவர்களுக்கு நம்பிக்கையில்லை: பாஜக

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு முதல்வர் மமதா பானர்ஜி மீது நம்பிக்கையில்லை என பாஜக விமர்சித்துள்ளது.

DIN

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு முதல்வர் மமதா பானர்ஜி மீது நம்பிக்கையில்லை என பாஜக விமர்சித்துள்ளது.

பேச்சுவார்த்தையை நேரலை செய்ய மருத்துவர்கள் கோரிக்கை வைத்த நிலையில், அதனை ஏற்க மமதா தலைமையிலான அரசு மறுப்பதாகவும், அதற்கு பதிலாக சுருக்கெழுத்து தட்டச்சரை நியமித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியது.

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் கடந்த மாதம் 9ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைக் கண்டித்து கொல்கத்தாவிலுள்ள இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவ மாணவியின் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இளநிலை மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த பலமுறை மமதா பானர்ஜி கோரிக்கை வைத்தார். முதல்வரின் இந்த கோரிக்கையை மருத்துவர்கள் நிராகரித்து வருகின்றனர்.

பேச்சுவார்த்தையை நேரலை செய்ய வேண்டும், 30க்கும் மேற்பட்ட இளநிலை மருத்துவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை மமதா அரசு ஏற்க மறுப்பதால் மருத்துவர்கள் பேச்சுவார்த்தையை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த மமதா பானர்ஜியின் இன்றைய கோரிக்கையையும் இளநிலை மருத்துவர்கள் போராட்டக் குழு ஏற்க மறுத்தது.

இந்நிலையில், இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவர் மிதுன் சர்க்ரவர்த்தி பேசியதாவது, மருத்துவர்களை மூளைச்சலவை செய்ய மமதா பானர்ஜி முயற்சிக்கிறார். மருத்துவர்களின் போராட்டத்தில் நானும் ஒரு பகுதியாக பங்கேற்றுள்ளேன். இந்தப் போராட்டம் நீதி கிடைக்காமல் ஓயாது. பாதியில் கைவிடப்படும் என சிலர் கருதுகின்றனர். ஆனால், அது நடக்காது எனக் குறிப்பிட்டார் மிது.

இதேபோன்று பாஜகவின் மற்றொரு தலைவரான சுகந்த மஜும்தர் பேசியதாவது, மாநில அரசு சார்பில், இளநிலை மருத்துவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், பேச்சுவார்த்தையை நேரலை செய்ய முன்வராமல், மருத்துவர்களுடனான பேச்சுவார்த்தை சாத்தியமில்லை. நேரலைக்கு பதிலான சுருக்கெழுத்து தட்டச்சரை நியமிக்கின்றனர். இதனால், மமதா பானர்ஜி மீது மருத்துவர்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இதில் தீர்வு காணப்பட்டால் அது மிகவும் நல்லது. ஆனால், இந்த போராட்டம் பாதியில் நிற்க பாஜக விடாது. முதல்வர் மமதா பானர்ஜி பதவி விலக வேண்டும். இப்பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர் அவர் எனப் பேசினார் மஜும்தர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏஜிஎஸ் தயாரிப்பில் அர்ஜுனை இயக்கும் அறிமுக இயக்குநர்!

கச்சா எண்ணெய் மீது தள்ளுபடி! அமெரிக்கா வேண்டாம்; ரஷியா இருக்கு! இந்தியாவுக்கு இன்ப அதிர்ச்சி!

ஃபிளிப்கார்ட்டில் ஐபோன் 16 விலை சரிவு! சலுகையுடன் வாங்குவது எப்படி?

மேற்கு கரையை இரண்டாகப் பிரிக்கக் கூடிய திட்டம்! இஸ்ரேல் அரசு ஒப்புதல்!

சிட்ரான் சி3 எக்ஸ் ஷைன் - புதிய வேரியண்ட் அறிமுகம்!

SCROLL FOR NEXT