இந்தியா

பால் உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது -மத்திய அரசு

மீன் வளம், கால்நடை மற்றும் பால் வளம் ஆகிய துறைகளில் 100 நாள்களில் எட்டியுள்ள சாதனைகள் குறித்து...

DIN

பால் உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது என்று மீன் வளம், கால்நடை மற்றும் பால் வளம் ஆகிய துறைகளுக்கான மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் இன்று(செப். 17) தெரிவித்துள்ளார்.

மீன் வளம், கால்நடை மற்றும் பால் வளம் ஆகிய துறைகளில் மத்திய அரசு பொறுப்பேற்ற 100 நாள்களில் எட்டியுள்ள சாதனைகள் குறித்து செய்தியாளர்களுடன் மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் பேசுகையில், கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் பால் உற்பத்தி 57.62 சதவிகிதம் வளர்ச்சியை எட்டியுள்ள என்றும், பால் உற்பத்தியில் உலகளவில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்தியாவின் வேளாண்மைத் துறையும் பொருளாதாரத்துக்கு முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. அதில் விவசாயிகள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

உலகளவில் மீன் உற்பத்தியில் இந்தியா 2-ஆம் இடம் வகிக்கிறது.இது மகத்தான சாதனையாகும்.நீலப் புரட்சி, மீன் வளத்துறை, மீன் வளர்ப்பில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி ஆகிய பல்வேறு திட்டங்களில் ரூ. 38,572 கோடி முதலீடுகள் செய்யப்பட்டிருப்பதன் விளைவாக இது சாத்தியமாகியுள்ளது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT