ஜம்மு - காஷ்மீர் முதல் கட்டத் தேர்தல் PTI
இந்தியா

ஜம்மு- காஷ்மீர் தேர்தல்: 11 மணி நிலவரம்!

ஜம்மு - காஷ்மீர் முதல் கட்டத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 26.72% வாக்குகள் பதிவாகியுள்ளது.

DIN

ஜம்மு - காஷ்மீர் முதல் கட்டத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 26.72% வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இன்று(புதன்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், ஜம்மு - காஷ்மீர் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

காலை 9 மணி நிலவரப்படி 11.11% வாக்குகள் பதிவான நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 26.72% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மாவட்டவாரியாக, அனந்த்நாக்-25.55%, தோடா - 32.30%, கிஷ்த்வார்-32.69%, குல்காம்-25.95%, புல்வாமா-20.37%, சஞ்சீவி-31.25% ஷோபியான்-25.96% என வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த தேர்தலில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.

ஜம்மு - காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT